Header Ads



ஆசிரியையின் தவறான முடிவு


ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 


குறித்த ஆசிரியை தனது வீட்டின் அறையொன்றில் தூக்கிட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த ஆசிரியை சம்பவத்தன்று தனது பிள்ளையை தனது கணவருடன் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு  தற்கொலை செய்துகொண்டதாகவும், வர்த்தகரான அவரது தந்தை திடீரென வீட்டுக்கு வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி, சமாதான நீதவான் பரீந்த கொட்டுகொட, குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன், தற்கொலைக்கான காரணம் எதுவும் வெளியாகாததால், முழுமையான பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பிரேத பரிசோதனையை கொழும்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் டபிள்யூ.எம்.பி.மகேஷ் லோவ் அவர்களால் செய்யப்பட்டு, உடல் உறுப்புகள் அரசு சோதனையாளருக்கு அனுப்பி அறிக்கைக்கோர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, சகல விடயங்களையும் பரிசீலித்து இந்த திடீர் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பை வழங்குமாறு தென் கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் பரிந்த கொட்டுகொட உத்தரவிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.