Header Ads



பங்களாதேஸில் ஹத்துருசிங்கவுக்கு நெருக்கடி


பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் புதிய தலைவரான பாரூக் அஹமட்  தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க தொடர்வது குறித்து கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வேறு வழியைத் தெரிவு செய்தால் பதவி விலகத் தயார் என ஹத்துருசிங்க அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த ஆதங்கத்தை பாரூக் வெளிப்படுத்தியுள்ளார்.


ஹத்துருசிங்கவின் பதவிக் காலத்தை முழுமையாக மதிப்பீடு செய்ய விரும்புவதாகவும், சகாக்களுடன் கலந்தாலோசித்த பிறகு பயிற்சியாளரின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவை எடுப்பதாகவும் அஹமட் தனது தொடக்க செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.


அவரை விட சிறந்த ஒருவரை பெறக்கூடிய ஒரு பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்றும் பாரூக் கூறியுள்ளார்.


ஹத்துருசிங்கவை மீண்டும் நியமித்த முடிவை விமர்சித்த அஹமட்,  இரண்டாவது முறையாக ஹத்துருசிங்கவை திரும்ப அழைத்து வந்தது ஒரு உண்மையான தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மீண்டும் அழைத்து வந்தவர்கள் அவரை ஒரு மந்திரவாதி என்று நினைத்தார்கள். ஹத்துருசிங்க மட்டுமே இந்த வெற்றியை உருவாக்கினார் என்று அவர்கள் நினைத்தார்கள். எனினும் கிரிக்கெட் என்பது மந்திரம் அல்ல. பங்களாதேஷின் வெற்றிக்கு வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக் குழு மற்றும் சபையின் அதிகாரிகளும் காரணம் என்று அஹமட் கூறியுள்ளார்.


2025 செம்பியன்ஸ் கிண்ணம் வரை நீடிக்கப்பட்ட ஒப்பந்தத்துடன், 2023 பெப்ரவரியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஹத்துருசிங்க, அணியின் ஏமாற்றமளிக்கும் செயல்திறன் காரணமாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.