Header Ads



அரசாங்கத்திற்கு விழுந்த பெரிய அடி


இதுவரையில் நடைமுறையிலிருந் இருந்துவரும் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு கம்பெனிகளால் கையாளப்பட்டு வந்த இலங்கைக்கான முறைகேடான இணைய வழி E-வீசா தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி , பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும், அவர்களைத் தொடர்ந்து இன்னும் சில தரப்பினரும் தாக்கல் செய்த வழக்குகள் வெள்ளிக்கிழமை(2) உயர் நீதிமன்றத்தில் நீண்ட நேரமாக வாதிக்கப்பட்ட பின்னர் ,இந்த வழக்கை முற்றாக விசாரித்து முடிக்கும் வரை   இடைக்காலத்தடை உத்தரவு விதித்து, உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை( 2 ) தீர்ப்பளித்திருக்கிறது.


முன்னர் சட்டபூர்வமாக இதனை  வழங்கிவந்த மொபிடெல் சேவை வழங்குநரை மீண்டும் அதில் ஈடுபடுத்துமாறும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


பிரஸ்தாப தீர்ப்பு மூவரடங்கிய நீதியரசர் குழாத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து, இது அரசாங்கத்தின்   மீதான பலத்த அடி யென்றும் ,இதனூடாக தேசிய பாதுகாப்பு தகவல்கள் கசிவதிலிருந்தும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி யடைவதிலிருந்தும் காப்பாற்றபட்டி ருப்பதாகவும், இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி யென்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பயனுள்ள கருத்துக்களைத் தெரிவித்தனர்.

1 comment:

  1. HOW EVER THESE THREE GUYS WILL BE SEEN IN RANIL,S ELECTION PLATFORM IN THE NEAR FUTURE.

    ReplyDelete

Powered by Blogger.