Header Ads



நாமல் அறிவிக்கப்பட்டதும், பயத்தினால் துடிக்கின்றனர்


 மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலிடம் சென்று சரணடைந்தவர்கள், அந்தக் கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டதும் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பயந்துபோய் இருக்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் பு நடைபெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.அதன்போது அவர் மேலும் கூறுகையில்,


நாட்டு மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. 


மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்ற நினைப்பிலேயே அரசாங்கம் இன்று இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் என்று கருதுகின்றோம். ஆனால் அரசாங்கம் தூர இடங்களுக்கு செல்லத் தேவையில்லை. கொழும்பிலுள்ள சில இடங்களுக்கு சென்று பார்த்தால் நிலைமை உண்மையில் எப்படி இருக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள முடியும்.


தற்போது அரசாங்கம் 5 பில்லியன் டொலர் கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் ஒரு இலட்சம் ரூபா கடனில் இருப்பவரின் சட்டைப் பையில் ஐயாயிரம் ரூபா இருப்பதை போன்றே இருக்கின்றது. அன்று ரணில் விக்கிரமசிங்கவை நாட்டை கடனுக்குள் தள்ளியதாகவும், மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கூறிய பந்துல குணவர்தன போன்றோர் இப்போது அவரை புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால் இவர்கள் வீசா சேவை உள்ளிட்டவற்றில் கொள்ளையிட்டதை மறந்துவிட்டனர். இன்னும் 48 நாட்களே உள்ளன. அதன்பின்னர் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.


இதேவேளை கடந்த வாரத்தில் நாமல் ராஜபக்‌ஷவும் சஜித் பிரேமதாசவும் சந்தித்ததாக செய்திகளை பரப்பினர். சில்லரைத்தனமான மகிழ்ச்சியே இது. ஆனால் இன்று மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலிடம் சென்று சரணடைந்தவர்களின் நெஞ்சு இப்போது நாமல் ராஜபக்‌ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் வேகமாக துடிக்கின்றது. தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பயந்துபோய் இருக்கின்றனர்.


அதேபோன்று 1977 காலதத்தில் ஜே.ஆருக்கு இருந்ததை போன்ற குழுவினரே தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி கூறியதை கேட்டு அவர் எமது முன்னாள் தலைவர் என்ற ரீதியில் எனக்கும் வெட்கம் ஏற்பட்டது. அவர் கூறுவதை போன்று அப்போதைய லலித் அதுலத்முதலியாக இருந்தவர் மகிந்தானந்தவா? காமினி திஸாநாயக்கவா பிரசன்ன ரணதுங்க, ரணசிங்க பிரேமதாசவா லன்சா? ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்க நாங்கள் என்ன முட்டாள்களா? என்று கூறியவர்கள்தான் இப்போது ரணிலுடன் இருக்கின்றனர் என்றார்.  


No comments

Powered by Blogger.