Header Ads



டிஜிட்டல் பாசிசத்தை எதிர்கொள்கிறோம் - இஸ்ரேலின் கொடுமையை மறைக்க முயற்சி


இன்ஸ்டாகிராமிற்கான அணுகலை துருக்கி தடுத்ததை அடுத்து, சமூக ஊடக நிறுவனங்களை "பாலஸ்தீன மக்களின் குரல்களை முடக்க" முயற்சிப்பதாக ஜனாதிபதி தையிப் எர்டோகன் கடுமையாகக் கண்டித்துள்ளார்.


பாலஸ்தீன தலைவரும், ஹமாஸ் அரசியல் தலைவருமான இஸ்மாயில் ஹனியே இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான இரங்கல் பதிவுகளை சமூக ஊடகத் தளம் தடுத்துள்ளதாக துருக்கிய உயர் அதிகாரியொருவரின் அறிக்கையைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமுடன் துருக்கி இன்று -05- பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.


"பலஸ்தீனிய தியாகிகளின் புகைப்படங்களுக்கு கூட சகிப்புத்தன்மை இல்லாத டிஜிட்டல் பாசிசத்தை நாங்கள் எதிர்கொள்கிறோம், அவற்றை உடனடியாக தடை செய்கிறோம்" என்று எர்டோகன் ஹனியேவின் கொலையைப் பற்றி குறிப்பிட்டார்.


"இஸ்ரேலின் கொடுமையை மறைப்பதற்கும், பாலஸ்தீன மக்களின் குரல்வளையை முடக்குவதற்கும் அவர்கள் எல்லா வழிகளையும் கையாளுகிறார்கள். குறிப்பாக சமூக ஊடக நிறுவனங்கள் உண்மையில் போராளிகளாக மாறிவிட்டன" என்று அவர் அங்காராவில் ஆற்றிய உரையில் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.