Header Ads



பதுளையில் இருந்து அடுத்த பிரதமர்


இலங்கையின் அடுத்த பிரதமர் ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


 பதுளையில்   ஞாயிற்றுக்கிழமை (11)நடைபெற்ற 'ஏக்வா ஜெயகமு' நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


"இதை என்னால் உணர முடிகிறது. ஊவா மாகாணத்தில் இருந்து ஒரு பிரதமரை நியமிக்க வேண்டும் என்றால், பதுளை மாவட்டத்தில் உள்ள 9 ஆசனங்களிலும் வெற்றி பெற்றால் ,அவரைப் பிரதமராக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்வேன் என கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நோக்கி ஹரின் தெரிவித்தார்.


2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் நிமல் சிறிபால டி சில்வா 141,901 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. பதுளை மாவட்ட விருப்புத் தேர்வு பட்டியலில் நிமல் சிறிபால டி சில்வா 141,901 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்த காலம் மலையேறிவிட்டது. பதுளையில் முதலிடம் வந்து நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி சுரண்டியது மட்டுமல்லாமல் இலங்கையில் அபிவருத்தித் திட்டங்களில் ஈடுபடும் ஜப்பான் தன்னார்வ நிறுவனத்தில் பகிரங்கமாக 200 மில்லியன் ரூபா கப்பம் கேட்டபோது அதை ஜப்பான் இலங்கைத் தூதுவர் அப்போதைய சனாதிபதி கோதாவிடம் முறையிட உடனே இவரை பதவிநீக்கம் செய்து சில நாட்களில் அரச விசாரிப்பு சபை நியமித்து அப்படி ஒன்றுமே கேட்கவில்லையாம் என தீர்ப்பு கொடுத்து வெட்கம் கெட்ட இந்த தூங்கு மூஞ்சிக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து அமைச்சு பதவியைக் கொடுத்தது அப்போதைய அரசு. இவை அனைத்தும் இந்த நாட்டு மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. ஒரு தேர்தல் வந்தால் இந்து தூங்கு மூஞ்சிக்கு சரியான பதிலைக் கொடுக்க குறிப்பாக பதுளை மாவட்ட வாக்காளர்களும் குறிப்பாக இந்த நாட்டு மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.