வரம்பை மீறினால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவரின் ஆசனத்தை கூட பறிக்கலாம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரச் செலவுகள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை மீறினால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவரின் ஆசனத்தை கூட பறிப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற செயலமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் பிரச்சாரச் செலவுகளைச் செய்வது சட்டவிரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செலவுகள் தொடர்பாக கண்காணிப்பு அமைப்புகள் சிறப்பு இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளன.
Post a Comment