Header Ads



பங்களாதேஷ் மக்களின், பக்கம் அலிசப்ரி


பங்களாதேஷின் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் அந்த நாட்டு மக்களுடன்  இலங்கை தோளோடு தோள் நிற்கும் என்று இலங்கை அறிவித்துள்ளது.


இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.


இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலங்கையின் ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பங்களாதேஷூடனான அதன் நீடித்த நட்பை இலங்கை மதிக்கிறது மற்றும் அதன் மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது.


இந்தநிலையில் விரைவாக அந்த நாட்டில அமைதிக்கு திரும்பும் என்று நம்புவதாகவும் சப்ரி குறிப்பிட்டுள்ளார்.


பங்களாதேஷ் மக்கள் இந்த சவால்களை முறியடிக்கும் வலிமையைக் கண்டறிவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  


1 comment:

  1. உள்நாட்டு அரசியல் பற்றிய ஆழமான அறிவுப் பின்னணியற்ற இவருக்கு பங்களாதேஷ் அரசியலில் ஆர்ப்பாட்டக்காரர் சார்பில் கருத்துத் தெரிவிக்க இவர் யார்? தனக்கு எந்த அறிவு ஞானமும் இல்லாத விடயங்களில் தலையிட்டு,இறுதியில் கேவலப்பட்டு நாட்டுக்கும் அவமானத்தைத் தேடிக் கொடுப்பார்,இவ்வளவு தான் இந்த இலவச அமைச்சருக்குக் கிடைக்கும் பரிசு.

    ReplyDelete

Powered by Blogger.