Header Ads



ஜனாதிபதியின் யோசனையை நிராகரித்தார் சபாநாயகர்


பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடுவதற்கு சட்டரீதியான அடிப்படைகள்  இல்லை என்பதை எடுத்துரைத்த சபாநாயகர், அவ்வாறான சூழ்நிலையில் தாம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடப் போவதில்லை எனவும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்தது.


இதனைத் தொடர்ந்து, பொலிஸ்மா அதிபர் தொடர்பான பிரச்சினைக்கு பிரதம நீதியரசர் மற்றும் சபாநாயகர் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.


இந்த நிலையிலேயே, பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் பிரதம நீதியரசருடன் கலந்துரையாடப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இறுதித் தருணத்தில் தான் நரிக்கு உண்மை புரிந்திருக்கின்றது. சீசீ அந்தப்பழம் புளிக்கும். அது எனக்குத் தேவையில்லை.எல்லா சந்தர்ப்பங்களையும் சரியாகப் பாவித்து தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் அரசாங்க தனியார் வாய்ப்புக்களை பயன்படுத்தி உச்சமாகப் பாவித்து, அரச நிதியை கோடிக்கணக்கில் சூறையாடிவிட்டு தாசீனம் செய்து ரணில் மண்ணைக்கவ்வுவது உறுதியான பின் ரணிலுக்குப் பின்புறத்தைக் காட்டும் இது போன்ற நபர்களுக்கு இந்த நாட்டு மக்கள் தான் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரைக்கும் இது போன்ற தரம் கெட்ட சபாநாயகர் ஒருபோதும் பாராளுமன்றத்தில் இருந்ததாக எமக்கு ஞாபகம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.