Header Ads



உங்கள் ஊரில் விடிந்ததும், என்ன பேசிக்கொள்கிறீர்கள்..?


கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃபின் காலத்தில் மக்கள் விடிந்ததும் நேற்று யார், கொல்லப்பட்டார், யார் சிலுவையில் அறையப்பட்டார், யார் சிறையில் அடைக்கப்பட்டார் என்று பேசிக்கொள்வார்கள்.

மன்னர் வலீத் பின் அப்துல் மலிகின் காலத்தில் மக்கள் விடிந்ததும் நேற்று என்ன புதுப் புது கட்டுமான பணிகள் நடந்தன? என்ன தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன?

என்ன நீர்ப்பாசன திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்று கேட்டுக்கொள்வார்கள்.

மன்னர் சுலைமான் பின் அப்துல்-மாலிகின் காலத்தில் - அவர் உண்ண, குடிக்க, உடுக்க, படுக்க ஆடம்பர ஏற்பாடு செய்வதில் அதீத மோகம் கொண்டவராக இருந்தார்- மக்கள் விடிந்ததும் நேற்று என்ன புதுப் புது உணவுகள், உடைகள், விடுதிகள், மங்கையர்கள், திருமணங்கள் பற்றி பேசிக்கொள்வார்கள்.

எளிமைக்கு நேர்மைக்கும் பேர் போன மன்னர் உமர் பின் அப்த் அல்-அஸீஸ் ஆட்சி காலத்தில் மக்கள் விடிந்ததும் எவ்வளவு ​​குர்ஆன் படித்தீர்கள், எவ்வளவு மனப்பாடம் செய்தீர்கள்? புதிய கல்வி வகுப்புக்கள், புதிய ஆன்மீக சபைகள் பற்றி பேசிக்கொள்வார்கள்.

இதைத்தான் சுருக்கமாக:-
"அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி"
என்று சொல்வார்கள்.

✍
தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.