Header Ads



கடவுச்சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு - விண்ணப்பிப்பதை தாமதப்படுத்துமாறு கோரிக்கை


கடவுச்சீட்டுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக ஒக்டோபர் மாதம் வரை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதை தாமதப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


இது தொடர்பில் அவர் மேலும் வலியுறுத்துகையில்,


"ஒக்டோபர் மாதம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் சர்வதேச தரத்திற்கு அமைய புதிய இ - கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.


பல்வேறு காரணங்களால் புதிய கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரங்களை பெறுவதில் தாமதமானதால் புதிய கடவுச்சீட்டு வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


ஒரு நாளைக்கு சுமார் 3,000 கடவுச்சீட்டுக்களை வழங்க வேண்டும் என்றாலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக தற்போது 900 மட்டுமே வழங்கப்படுகின்றன. 


இந்நிலை காரணமாக, மிக அவசர தேவைகளுக்காக தினமும் 100 கடவுச்சீட்டுக்களை வழங்குவதில் சில விதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 


இதுவரை வழங்கப்பட்ட அனைத்து கடவுச்சீட்டுக்களிலும், 23 சதவீதம் கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளன.


அதேவேளை, நாட்டின் கடவுச்சீட்டு தரவரிசையை தற்போதைய 193ஆவது இடத்தில் இருந்து மேம்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதுடன், புதிய கடவுச்சீட்டு மூலம் 50 இற்கு மேல் தரவரிசைப்படுத்த முயற்சிக்கப்பட்டு வருகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments

Powered by Blogger.