அநுரகுமார கூறுவது உண்மையில்லை, கடிதத்தை காட்டுமாறு சவால்
''2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி நாடு தீக்கிரையாக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொல்லப்பட்டு நொடிக்கு நொடி வன்முறையில் மூழ்கியிருந்த நிலையில் அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரவு 7.11 மணியளவில் பதவி விலகினார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, நாட்டைப் பொறுப்பேற்பது தொடர்பில் கலந்துரையாட வருமாறு அறிவித்தார். ஆனால் மறுநாள் மாலை 6.32 மணி வரை எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது அந்தத் தரப்பிலிருந்து யாரும் கலந்துரையாடலுக்கு வரவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மறுநாள் மாலை 6.32 மணியளவில் எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா ஆகியோர் வந்து கலந்துரையாடினர். கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என நாலக கொடஹேவா நேற்று தெரிவித்திருப்பதைக் கண்டேன். கோரிக்கை வைக்க அது நேரமல்ல. அப்போது நாடு பேரம் பேசும் நிலையில் இருக்கவில்லை.
'நாட்டை நேசிப்பவராக இருந்தால், அந்த நெருக்கடியை சீர்செய்யும் திட்டம் உங்களிடம் இருந்திருந்தால், முழு மொட்டுக் கட்சியினதும் ஆதரவை வழங்குவேன் சஜித்', என்று கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். அப்போது நீங்கள் நாட்டைப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை. நாட்டைப் பொறுப்பேற்கும் வேலைத்திட்டமும் தன்னம்பிக்கையும் அவரிடம் இருக்கவில்லை.
அதனால் காலம் கடத்திவிட்டு இறுதித் தருணத்தில் கடைசி கடிதம் அனுப்பினார். அதற்கு நாலக கொடஹேவா கடிதத்தை எழுதுமாறு ஆலோசனை வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் அமர்த்துவார் என்பதை நாலக கொடஹேவா முன்பே அறிந்தார். நாட்டை ஏமாற்றுவதற்கு உடனடியாக கடிதம் எழுதுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியிருந்தார். நாலக கொடஹேவா இப்போது எதிர்க்கட்சித் தலைவரின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.
அத்துடன், ஜூலை 12ஆம் திகதி, நாட்டைக் கைப்பற்ற விரும்புவதாகக் கடிதம் அனுப்பியதாக அனுரகுமாரவும் கூறியிருக்கிறார். அது உண்மையில்லை. அந்த கடிதத்தை காட்டுமாறு அனுரகுமாரவுக்கு சவால் விடுத்து 48 மணிநேரம் ஆகிவிட்டது.
அதனால் அனுரவிற்கு இன்னும் நேரம் உள்ளது அவர் அனுப்பிய கடிதத்தைக் காட்ட வேண்டும். அவருடன் விவாதம் செய்யவும் நான் தயாராகவே உள்ளேன்'' என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், புதிய மக்கள் முன்னணியின் ஆலோசகர் பெபிலியான சுனேத்ராதேவி, ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சுமனதம்ம தேரர், வெல்லம்பிட்டிய மற்றும் ஏனைய மகா சங்கத்தினர், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, அனுப பெஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, சட்டத்தரணிகளான பிரேமநாத் சி. தொலவத்த, உதயன கிரிடிகொட, பிரதீப் உடுகொட, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த வர்ணசிங்க, புதிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் உபதிஸ்ஸ குமாரதுங்க, மகளிர் விவகாரச் செயலாளர் திலினி டி சில்வா, பிரச்சார செயலாளர் விமுக்தி ஜயசூரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவு
Ranil 2024 - இயலும் ஸ்ரீலங்கா
22-08-2024
Post a Comment