ஜம்மியத்துல் உலமாவிடம் அநுரகுமார சொன்னது என்ன..??
கரு சம்பந்தப்பட்டு திருபுபடுத்தப்பட்ட செய்திகளை அநாதையான அரசியல்வாதிகள் பரப்புகிறார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
(ஜம்மியத்துல் உலமா அமைப்பினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது – 21.08.2024)
அண்மையில் பிரதானமாக பேசப்படுகின்ற ஒரு விடயம் தான் பாராளுமன்றத்தில் நான் கூறிய ஒரு விடயத்தை திரிபுபடுத்தி கொண்டுச் செல்கிறார்கள். குறிப்பாக நான் கண்டேன், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதனைப் பற்றி பகிரங்கமாக கூறிவருகிறார். அரசியல் ரீதியாக நிர்க்கதி நிலையுற்றுள்ள குழுக்களின் பிரதான பணியாக அமைந்துள்ளது என்னவென்றால் தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு பொய்யான தகவல்களை பரப்புவதாகும்.
தேசிய மக்கள் சக்தி அனைத்து மதங்களினதும் சுதந்திரமான வழிப்பாட்டு உரிமைகளையும் அனைத்து கலாச்சார உரிமைகளையும் பேணி பாதுகாத்து முன்னெடுத்துவருவதை ஏற்றுக்கொள்கின்ற ஒரு அரசியல் இயக்கமாகும். மொழி ரீதியாக, மத ரீதியாக அதைப்போலவே கலாச்சார ரீதியாக எமது நாட்டில் பிளவுகளை வைத்துக்கொள்ளக்கூடாது. நாங்கள் இலங்கையர்கள் என்ற வகையில் ஒன்று சேரவேண்டுமென நம்புகின்ற ஒரு இயக்கமாகும். அன்று நான் பாராளுமன்றத்தில் மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டியது எமது நாட்டில் வன்முறையும் முரண்பாடுகளும் உருவாவது அந்தந்த சமூகத்தில் நிலவுகின்ற தீவிரவாத அரசியலின் காரணமாகவேயாகும்.
எங்களுக்குத் தெரியும் சிங்கள சமூகத்தில் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைகளுக்கு அழைப்புவிடுக்கின்றன. அதைபோலவே தமிழ் சமூகத்தில் நிலவுகின்ற தீவிரவாத கூற்றுக்கள் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைக்கு வழிசமைத்தன. அதைபோலத்தான் முஸ்லிம் சமூகத்திலும் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைக்கு வழிசமைத்தது. அது ஒட்டுமொத்த மக்களுமல்ல. அந்த தீவிரவாதத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் இல்லை. அந்த தீவிரவாதத்தில் ஒட்டுமொத்த சிங்கள மக்களும் இல்லை. அந்த தீவிரவாதத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இல்லை. எனினும் அத்தகைய மிகவும் சிறிய குழுக்கள் நிலைமையை திரிபுப்படுத்தி உண்மையான இறைவனோ அல்லது புத்த பிரானோ உபதேசித்த விடயங்களுக்கு பதிலாக அதற்கு தாமாகவே வியாக்கியானம் கற்பித்து சமூகத்தை தீவிரவாதத்தை நோக்கி கொண்டு செல்கின்றன.
அதோ அந்த தீவிரவாதம் தான் அந்த சமூகத்தின் தோன்றுகின்ற தீவிரவாதம் தான் வன்முறைகளின் கருவறையாக மாறுகின்றன. அந்த விடயங்களை நாங்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைத்த பின்னர் அது பற்றிய மிகுந்த குறைக்கூறல்கள் வட்சப் மூலமாக சஞ்சரித்து வருவதை நாங்கள் அறிகிறோம். நாங்கள் அனைத்து மக்களிடமும் வேண்டிக்கொள்வது கடந்த காலங்களில் இந்த நாட்டில் இனவாத அரசியல் மேலோங்கும்போது எங்களுடைய நடைமுறைகளை சற்று பாருங்கள். நாங்கள் எந்த விதமான இனவாதத்திற்கும் கட்டுப்படாத, மிகவும் சிரமமான தருங்களில் கூட இனவாதத்திற்கு பதிலாக தேசிய ஒற்றுமைக்காக பாடுபட்ட இயக்கமாகும்.
எனவே திடீரென தோ்தல் மேடைகளில் சிங்கள பௌத்தத்திற்கு எதிரான இயக்கமொன்று முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கமொன்று முஸ்லிம் மக்களின் மதவுரிமைகளுக்கு எதிரான இயக்கமொன்று அவர்களின் மார்க்க நம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கமொன்று என எம்மை குற்றச்சாட்ட தொடங்கியிருக்கிறார்கள். இவை எல்லாமே எமக்கு எடுத்துக்காட்டுவது சரித்த ஹேரத்தின் திஸ்ஸ அத்தநாயக்கவின் ரவூப் ஹக்கீமின் அரசியல் வங்குரோத்து நிலைமையையும் நிர்க்கதி நிமையையுமேயாகும்.
மக்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றிய தீர்வோ அதனை தீர்ப்பதற்கான ஆற்றலோ இவர்களுக்கு கிடையாது. எனவே இவர்களின் ஒட்டுமொத்த அரசியலும் குறைக்கூறல்கள் மற்றும் பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. கரு சம்பந்தப்பட்டு திருபுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புகிறார்கள். நாங்கள் குறிப்பாக ஜம்மியத்துல் உலமா அமைப்பிற்கு இந்த இனவாத போக்கு பற்றியும் பொய்யான விடயங்கள் பற்றியும் எமது சார்பிலான விடயங்களை எடுத்துரைத்தோம்.
Post a Comment