Header Ads



எமது வீடுகள் எரிக்கப்பட நாமலின் தவறான செயற்பாடுகளே காரணம்


எனது வீடுகள் எரிக்கப்பட்ட போது, அத்துகோரல எம்.பி தனது உயிரை தியாகம் செய்ய நேர்ந்த போதும் நாமல் ராஜபக்ஷ எம்.பி உள்ளிட்டோரின் தவறான செயற்பாடுகளே காரணம் என  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.


" நாமல் ராஜபக்சவுக்கு வரலாறு தெரியாது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக இருந்தபோது தனது தந்தைக்கு ஜனாதிபதி வேட்பாளர் கொடுக்க சந்திரிகா பண்டாரநாயக்க தயாராக இல்லை. அப்போது, ​​  மஹிந்த ராஜபக்சவின் பெயரை நான் முதலில் நானே பரிந்துரைத்தேன் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.


“அப்போது நான் மிகவும் சிரமப்பட்டேன், ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து திருமதி சந்திரிகா என்னைத் திட்டினார். அது மட்டும் அல்ல. அவருடைய சித்தப்பாவை ஜனாதிபதியாக்க உதவினேன் என்றார்.


செஹான் சேமசிங்க மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை நல்லது என  நாமல் ராஜபக்ஷ கூறுவதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். அவர்களின் தவறான செயல்களால் தான் இதுபோன்ற சூழ்நிலைகளை சந்திக்க நேரிட்டது.


நாமல் ராஜபக்ஷவின் தவறான பணியினால்தான்  அத்துகோரள போன்றவர்கள் அன்றைய தினம் உயிர் தியாகம் செய்ய நேரிட்டது. போராட்ட தினத்தில் நாங்கள் கூட்டங்களை நடத்தி செய்த காரணத்தால் தான் அந்த நிலைக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.


"அனுராதபுரம் மாவட்டத்தில் எனது வெற்றிடத்தை   நாமல் ராஜபக்சவால் நிரப்ப முடியாது என்று நான் கூறுகிறேன்." தனது வெற்றிடத்தை நிரப்புவதற்கு தானே முன்னிலையாக வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.


எனக்கு சவால் விடுக்கும் வகையில் நாமல் ராஜபக்ஷ, கூட்டமொன்றை நடத்தினார். அதில், 10 எம்பிக்கள் பங்கேற்றனர். இது அரசியல் அல்ல. மீண்டும் யோசித்து எடுக்கப்பட்ட முடிவு. சிந்தித்து எடுத்து வைக்கப்பட்ட கால். ரணிலுடன் இணைந்து அடுத்த தேர்தலில் வெல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றார்.

No comments

Powered by Blogger.