Header Ads



எங்களது உள்ளமும், மனமும் தூய்மையானது


 எஸ்.எம். சந்திரசேனவுக்கு வழங்கிய ஆதரவின் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்,  பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


பசில் ராஜபக்ச எஸ்.எம்.சந்திரசேன விரும்பிய பதவிகளை வழங்குவதற்காகவே போராடினார்.  அன்று பசில் ராஜபக்ச நிபந்தனையின்றி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவுக்காக உதவினார்.


பசில் ராஜபக்சவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் ஏதேனும் விரோதம் இருந்திருந்தால், அதற்குக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவுக்கு தேவையான பதவிகளை வழங்குவதற்காக நாங்கள் போராடியதே.


எங்களது உள்ளமும் மனமும் தூய்மையானது. எங்களால் முடிந்ததைச் செய்தோம். ஆனால் இன்று அவர்கள் எடுக்கும் முடிவு அவர்களின் முடிவு. திரும்பி வருபவர்களுக்கு கட்சியின் கதவு திறந்தே உள்ளது.  அவர்கள் மகிந்த ராஜபக்சவின் வாசல் வழியாக கட்சிக்குள் வந்து செல்லலாம் என குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. வாயைத் திறந்தால் பொய்யையும் போலி வேசத்தையும் கக்கும் இந்தவகை நபர்களின் உண்மைத் தோற்றத்தின் வௌிப்பாடு பற்றி அல்குர்ஆன் 18 ஸூரத்தின் 103 வது 104 வசனங்களில் அல்லாஹ்தஆலா மிகத் தௌிவாக கூறுகின்றான். சற்று பொறுமையாக வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள்
    18:103. “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
    18:104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.

    ReplyDelete

Powered by Blogger.