Header Ads



என்னைப் பற்றி எழுதும், ஒவ்வொரு முஸ்லிம் நண்பர்களுடனும்...!


- Ramanathan Archchuna -

 

சாவகச்சேரி வைத்திய சாலையில் ஆரம்பித்தபோது ,அங்கேயும் ஒரு கூட்டம் வைத்தியர்களுடன் சேர்ந்து என்னை எதிர்த்தது..


கோவிலில் நின்ற தேரை வீதிக்கு இழுத்து எனது தொழிலை எனது குடும்பத்தை விட்டு என்னை அரசியலுக்கு அழைத்து அங்கேயும் என்னை ஒரு கூட்டம் விமர்சித்தது..


எனது தங்கை சிந்துஜாவின் மரணத்தை தேடி நான் மன்னார் போனபோது எந்தக் கூட்டம் என்னை விமர்சித்ததோ அதே கூட்டமே மறுபடியும் உண்ணாவிரத போராட்டம் பச்சை கலர் உடுப்புடன் வந்து பாதையில் நின்றது..


பொதுமக்களின் பிரதிநிதிகள் என எல்லாரும் அந்த பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டார்கள்..


ஒரு தொழில் இழந்து, இருக்க இடம் இழந்து, என்னை பாதையில் விட்ட போது ஒவ்வொருவரும் என்னை அணு அணுவாய் குத்தி பார்த்தார்கள்..


அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்லி மீண்டும் வைத்தியசாலைக்கு நிர்வாகியாகவே விடுகிறோம் என்று சொன்ன ஒரு கூட்டம் மாதக்கணக்காய் என்னை அலை கழித்தது..


ஒரு கூட்டம் என்னை பாராளுமன்றத்துக்கு அழைத்து அழகு பார்த்தது..


இன்னொரு கூட்டம் நண்பர்கள் கதைக்கிறோம் வாருங்கள் என்று சொல்லி என்னை குதறி பார்த்தது...


அதன் போது வெளிவந்த உரையாடலை வைத்து அக்குபர் ஆணிவேராய் பிரித்து எடிட் பண்ணி சில பல மோடையர் கூட்டம் முயன்று பார்த்தது..


நானாக்களும் சாச்சாக்களும் என்னை ஆதரித்த போது, அதில் உள்ள வரி பிழைகளை வைத்திய சாவி பற்றிய நான் கூறிய கருத்துக்களை தெளிவுபடுத்தி சில பல கூட்டம் என்னை மான பங்கப்படுத்தியது..


இருந்தும் நான் நானாய் இருக்கிறேன்..


தமிழ் தேசியம் நோக்கிய எனது கொள்கை மதம் சார்ந்த வெறியுடனோ அல்லது இனம் சார்ந்த வெளியிடனும் அல்ல..


எனது மக்களுக்கான நியாயமான போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் எப்போதுமே நியாயமாக இருப்பார்கள் என்று எப்போதுமே நம்புகின்றேன்..


என்னால் ஏதாவது வாய் தவறி, எனது முஸ்லிம் நண்பர்களுக்கு பிழைகள், கருத்துக்கள் வந்திருந்தால் அவற்றை எனக்காக மன்னித்துக் கொள்ளவும்..


அரசியல் இனம் என்பது இனம் மதம் மொழி சாராதது என்பதை நான் நன்றாக அறிவேன்..


ஆனால் ஒருபோதும் எமது தாய் திருநாட்டில் அவ்வாறான அரசியல் நடந்ததில்லை..


நாங்கள் அதை செய்வோம்..


என்னுடன் படித்த ஒவ்வொரு நாணாக்களையும் சாச்சாக்களையும் போய் கேட்டுப் பாருங்கள் அர்ச்சுனா யார் என்று...


அவர்கள் தந்த ஒவ்வொரு சாபானிலும் அன்பு கலந்திருந்தது..


என்ன என்னைப் பற்றி எழுதும் ஒவ்வொரு முஸ்லிம் நண்பர்களுடன் ஒன்றாக இருந்து சாப்பிட முடியவில்லை என்ற ஒரு கவலை..


என்ற ஒரு நாள் எனது மனம், உங்களுக்கு தெரியும் போது நான் அதனை கடந்து போய் இருப்பேன்..


நீங்கள் ஒவ்வொருவரும் அறியும் கற்கள், நான் அடுக்கிக் கொண்டே போவேன்..


பள்ளிகளிலும் தேவாலயங்களிலும் விகாரங்களிலும் எனது உண்மையான மூச்சுக்காற்று என்றுமே கலந்திருக்கும். 


ஆனால் நான் ஒரு இந்துவே..

நான் ஒரு தமிழனே..

அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்..


இப்படிக்கு அன்பு தம்பி 

இராமநாதன் அர்ச்சுனா

No comments

Powered by Blogger.