Header Ads



தனியார் வைத்தியசாலைக்கு பாடம் புகட்டிய ஒரு தந்தை


இலங்கையின் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் மாத்தறை கிளையில் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக சிகிச்சை பெற சென்ற சிறுவன் ஒருவருக்கு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தை முகநூலில் காணொளி ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.


சிறுவனின் கையில் ஏற்பட்ட முறிவிற்கு சிகிச்சை பெறுவதற்காக அவரின் தந்தை சிறுவனை குறித்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.


அத்துடன், அதற்கான கட்டணமாக 4,000 ரூபாவும் அவரால் செலுத்தப்பட்டுள்ளது.


அதனையடுத்து, சிறுவனுடன் சிகிச்சை அளிக்கும் பகுதியில் காத்திருக்குமாறு வைத்தியசாலை ஊழியர்களால் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனினும், 4 மணிநேரத்திற்கு பின்னரும் சிறுவனை பார்வையிட வைத்தியர் எவரும் வராததால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்துள்ளார்.


இதன் பின்னர், சிறுவனின் தந்தை அனுமதிக் கட்டணமாக செலுத்தப்பட்ட 4,000 ரூபாவையும் 'X-Ray' அறிக்கையையும் தருமாறு வைத்தியசாலை ஊழியர்களிடம் கேட்டு அதனை நேரலையாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.


மேலும், தனக்கு இவ்வாறு இரண்டாவது முறையாக இதே வைத்தியசாலையில் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


அண்மைக்காலமாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறான கவனயீன பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.