Header Ads



ரமலான் மாதம் இரவில் கிடைத்த சுதந்திரம்...


1947 ஆகஸ்ட் 14ம் தேதி இஷா தொழுகைக்கு பிறகு நாடு முழுவதும் முஸ்லிம்கள் மசூதிகளில் இரவுத் தொழுகைக்காக குழுமியிருந்தனர்.


அது ஒரு ரமலான் நோன்பு மாதம்..


அன்றைய தினம் புண்ணியமான ரமலான் 27 இரவும் கூட.


மாலை முதலே நேரு தலைமையில் இந்திய தேசிய தலைவர்களும், பிரிட்டிஷ் அரசு பிரதிநிதிகளுடன் நடத்திய இறுதி கட்ட பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வர, நள்ளிரவில் சுதந்திர தேசமாக இந்தியா அறிவிக்கப்படுகிறது..


ஏற்கனவே சுரையா தயாப்ஜி வடிவமைத்த மூவர்ண கொடி டெல்லி செங்கோட்டையில் பண்டிட் ஜவஹர்லால் நேருவால்  அந்த நள்ளிரவிலேயே ஏற்றப்பட்டு பட்டொளி வீசி பறக்கிறது ...


பிரிட்டிஷ் இந்தியாவில் ரமலான்  இரவுக்காக மசூதியில் குழுமியிருந்தவர்கள் அதிகாலை ஃபஜ்ர் தொழுகை முடிந்து வெளியேறும் போது சுதந்திர இந்தியா மலர்ந்திருந்தது....


Colachel Azheem

No comments

Powered by Blogger.