Header Ads



ATM உடைக்கப்பட்டு பணம் கொள்ளை


நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள, வங்கியொன்றின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரமொன்று (ATM) உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (26.08.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


இந்நிலையில் விடுமுறையின் பின்னர் நேற்று(26) வங்கி திறக்கப்பட்டபோது,  தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில், தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையினுள் காணப்பட்ட இரும்பு குப்பைக் கூடையினால் பணம் வழங்கும் இயந்திரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.


மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.