Header Ads



படைப்பினத்தில் நீங்கள் பலசாலிகளா? அல்லது அவன் கட்டியமைத்தானே, அந்த ஆகாயம் பலமானதா? அல்குர்ஆன் : 79-27


நம் கண்கள் காணும் இந்த பிரபஞ்சத்தின் பிரமாண்டம் ஏறத்தாழ 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் இருக்கலாம் என வானவியல் விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 

1977 ஆம் ஆண்டில் விண்ணுக்கு ஏவப்பட்ட வாயேஜ்ரா 1 என்ற ஆய்வு விண்கலமானது மணிக்கு 61 ஆயிரம் கி.மீ வேகத்தின் ஆகாய வெளியை கீறிக் கிழித்த வண்ணம் பயணித்துக் கொண்டிருக்கிறது. 


அது ஏவப்பட்டு இன்றைக்கு 46 வருடங்கள் ஆகியும் அந்த விண்கலத்தால் வெறும் ஒரு ஒளி ஆண்டின் ஒரு நாள் தூரத்தைக் கூட தாண்டமுடியவில்லை. இதுவரைக்கும், அது வெறும் 17 ஒளி மணிநேரத்தை மட்டுமே தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. அப்படியென்றால் 93 பில்லியன் ஒளி ஆண்கள் என்பது எவ்வளவு பிரமாண்டம் என்பதை நீங்களே கணித்துப் பாருங்கள். 


இதில் நாம் அவதானிக்க வேண்டிய விடயம் யாதெனில், மனித ஆய்வுகளுக்கு தென்படும் பிரபஞ்சத்தின் விட்டம் என மதிப்பிடப்பட்ட அந்த 93 பில்லியன் ஒளி ஆண்டுகளும் நம் கண்ணால் பார்க்க, அல்லது விண்கலங்கள் நமக்கு எடுத்துத் காட்டும் ( الكون المرصود - Observable universe) பார்வைப் பிரபஞ்த்தின் பிரமாண்டம் மாத்திரம்தான். 


நமக்கு தென்படாத பிரபஞ்சங்கள், அண்டங்கள், ஆகாயங்கள், அகிலங்களின் பிரமாண்டம் பற்றிய அறிவை அகிலங்களின் அரசன் மாத்திரமே நன்கு அறிந்தவன். 


வான் மறை வசனம் ஒன்று மானிடமாகிய நம்மைப் பார்த்து பின்வருமாறு கேட்கிறது. 


(( படைப்பினத்தில் நீங்கள் பலசாலிகளா? அல்லது அவன் கட்டியமைத்தானே, அந்த ஆகாயம் பலமானதா?


📖 அல்குர்ஆன் : 79-27


குறிப்பு:- படத்தில் இருப்பது நம் கண் காணும் பிரபஞ்சத்தில் உள்ள மில்லியன் கணக்கான விண்மீன் திரள்களில் ஒரு மிகச்சிறிய புள்ளியாகும். 

✍ தமிழாக்கம் / imran farook



No comments

Powered by Blogger.