Header Ads



6 மாதங்களில் 119 பில்லியன் ரூபாய் இலாபம்


2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை மின்சார சபையினால் பதிவு செய்யப்பட்ட 93 பில்லியன் ரூபா நிகர இலாபமானது பல்வேறு மின் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 


குறித்த லாபம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு, அனல் மின் நிலையங்கள், நிலக்கரி கொள்முதல், உள்ளூர் வழங்குனர், பெரிய திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகள், மேற்புற சூரிய ஒளி மற்றும் குறுகிய கால வங்கி வசதிகள் ஆகியவற்றிற்கு நிலுவைத் தொகையை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் 'எக்ஸ்' தளத்தில் தெரிவித்துள்ளார் . 


பணம் செலுத்தப்பட்டதன் பின்னர் கிடைக்கும் ஏனைய இலாபங்களைக் கருத்தில் கொண்டு மின் நுகர்வோர் கட்டணங்கள் திருத்தப்பட்டு, குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.


2024 ஏப்ரல்- ஜூன் காலாண்டு வரிகளுக்குப் பின்னரான லாபத்தை CEB பதிவு செய்தது. குறித்த லாபமானது ரூ.34.53 பில்லியனை வரியாக செலுத்திய பின்னர் பதிவு செய்யப்பட்ட நிகர லாபமாகும்.


முன்னதாக, CEB ஜனவரி - மார்ச் காலாண்டில் வரிகளுக்குப் பிந்தைய நிகர லாபமாக ரூ. 84.67 பில்லியனைப் பதிவு செய்தது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் CEB மொத்த இலாபமாக 119.20 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. 6 maathangalili 116 billion laapam illa, 116 billion kollai (makkala kastapaduththi kollai adichathu)

    ReplyDelete

Powered by Blogger.