Header Ads



துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழப்பு


இன்று (04) அதிகாலை இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்தனர்.


அம்பாறை நாமல் ஓயா பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து அதிகாலை 2.45 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் கராடுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் இங்கினியாகல நெல்லியத்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 54 வயதுடைய பெண்ணும் அவரது 17 வயது மகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதேவேளை,  கராண்டுகல பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து 42 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


தற்கொலைக்கு முன்னர் அந்த அதிகாரியால் 33 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் மற்றும் மகள் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பின்னர் அவரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இதேவேளை, செவனகல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.