காஸாவில் 3 நாட்கள் தாக்குதல்கள் இடைநிறுத்தம் - இஸ்ரேல்
காஸாவில் போலியோ தடுப்பூசி ஏற்றுவதற்காக இஸ்ரேல் 3 நாட்கள் தாக்குதல் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக உலக சுகாதர நிறுவனம் கூறுகிறது
காசாவில் போலியோ தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஐநா சுகாதார அதிகாரிகளை அனுமதிக்க இஸ்ரேல் குறைந்தது மூன்று நாட்களுக்கு "மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்கு" ஒப்புக்கொண்டுள்ளதாக ஐநாவின் சுகாதார நிறுவனம் கூறுகிறது. அ
உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை, ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தாக்குதல் இடைநிறுத்தப்படுவதற்கு ஒப்பந்தம் என்று WHO கூறுகிறது.
"நாங்கள் விவாதித்து ஒப்புக்கொண்ட விதத்தில், போலியோ தடுப்பூசிகளை வழங்குதல் செப்டம்பர் முதல் தேதி, மத்திய காசாவில், மூன்று நாட்களுக்குத் தொடங்கும், மேலும் தடுப்பூசியின் போது மனிதாபிமான தாக்குதல் இடைநிறுத்தம் இருக்கும்" என்று பாலஸ்தீனிய பிராந்தியத்திற்கான ஏஜென்சியின் பிரதிநிதி ரிக் பீபர்கார்ன் கூறினார்.
Post a Comment