300 இலட்சம் ரூபாய் இலஞ்சம் - பலர் கைது
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் பெயரை முன்மொழிவதற்கு 300 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற போது, கட்சியின் செயலாளர் மற்றும் பல செயற்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜாவுரிமை அமைப்பின் தலைவர் கமந்த துஷார இலஞ்ச ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தக வளாகம் ஒன்றில் வைத்து இந்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரளை வெலிக்கடை பிளாசா வர்த்தக நிலையத்தில் இன்று (14) பிற்பகல் பணம் பெற்றுக்கொண்ட போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் அக்கட்சியின் முன்னாள் செயலாளரும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும் அடங்குவதாகவும் அவர்களின் வாக்குமூலங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
Post a Comment