கண் பார்வையிழந்த 3 பேர், 300 மில்லியன் கேட்டு வழக்கு
அரச வைத்தியசாலையில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் 'ப்ரெட்னிசோலோன் அசிடேடீன்' கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் நிரந்தர பார்வை இழப்புக்கு உள்ளான மூன்று நோயாளிகள், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (20) வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
தமது கண் பார்வை இழப்பு மற்றும் அதனால் தமது உயிருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளின் பொருட்டு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 10 பேரிடமிருந்து ரூ. 300 மில்லியன் கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு, பேராசிரியர். எஸ்.டி. ஜயரத்ன, வைத்தியர். விஜித் குணசேகர, வைத்தியர். அசேல குணவர்தன, வைத்தியர். ரொஹான் எதிரிசிங்க, வைத்தியர். மகேந்திர செனவிரத்ன, சாமீ கெமிஸ்ட் (தனியார்), இந்தியன் ஓ.பி.எல்.எல். ஆகியோரை இந்த வழக்கின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி நுவரெலியா பொது வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களால் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக கந்தபொல பிரதேசத்தை சேர்ந்த மனுதாரர் மக்கரி ராஜரத்தினம் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்து ஏப்ரல் 06, 2023 அன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், இந்தியானா Opthalmics LLPஇந்தியா தயாரித்த Prednisoloneஅசிடேட் கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்த நுவரெலியா வைத்தியசாலையின் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டதாகவும் வைத்தியசாலை அந்த மருந்தைத் தனக்கு கொடுத்ததாகவும் வாதி கூறினார்.
குறித்த சொட்டுகளை பல முறை பயன்படுத்திய பிறகு, ஏப்ரல் 19, 2023 அன்று அல்லது அதற்கு அடுத்த நாள் அவருக்கு கண்ணீர், அசௌகரியம், வலி மற்றும் தலைவலி ஏற்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
2023 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி தேசிய கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் செய்த பின், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மேற்கூறிய ப்ரெட்னிசோலோன் அசிடேட் கண் சொட்டு மருந்து மூலம் அவர் படிப்படியாக பார்வை இழப்பதைக் காண முடிந்தது என்று வாதி மேலும் கூறினார்.
பதினொரு பிரதிவாதிகளிடமிருந்தும் நட்டஈடு பெற்றுத் தருமாறு கோரி, இன்விக்டஸ் சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணிகளான சம்பத் விஜேவர்தன, தமலி குருப்பு மற்றும் பிரவிங்க ரத்னசேகர ஆகியோரின் ஊடாக மனுதாரர் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
Post a Comment