Header Ads



ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்போம் - SLPF அறிவிப்பு


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இன்று (31) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்வாறான கூட்டணியின் மூலமே நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும் என்று தெரிவித்தார். 


மற்றையவர்கள் சம்பிரதாய அரசியலை பின்பற்றும்போது, அனைவரையும் ஒன்றிணைத்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதே தனது எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டீ.எஸ்.சேனநாயக்க - பண்டாரநாயக்க ஆகியோர் 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய பின்னர் இவ்வாறானதொரு கூட்டிணைவு அமைவது இதுவே முதல் தடவையாகும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 


நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும்போது, அரசியல் கட்சிகளின் நோக்கங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதே தனது நிலைப்பாடாகும் என்றும், தற்போது எட்டப்படும் இந்த உடன்பாடுகள் வாயிலாக எதிர்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்கான தேசிய வரைவொன்றைத் தயாரிப்பதாகவும் தெரிவித்தார். 


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

31.07.2024

No comments

Powered by Blogger.