Header Ads



ரணிலின் தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும் - JVP கோரிக்கை


தேர்தலுக்காக நிறைவேற்று அதிகாரத்தை முறைகேடாக பாவிப்பதை தடுக்கவேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். 


தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி


(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு  - 2024.07.19)


கடந்த 17 ஆந் திகதியிலிருந்து ஜனாதிபதி தேர்தலுக்காக செயலாற்றுவதற்கான அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்திருந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்காக சனாதிபதி அதிகாரம், உத்தியோகத்தர்கள், பொதுப்பணம் செலவிடப்பட்டு பல்வேறு கருத்திட்டங்கள்  இடையறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரச நிதிகளின் முறைகேடான பாவனையை தடுத்து உண்மையான மக்கள் அபிப்பிராயம் சித்தரிக்கப்படுவதற்கான ஊழல்மிக்க முறைமையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காகவே 2022 போராட்டத்தின்போது மக்கள் வீதியில் இறங்கினார்கள்.  


எனினும் இன்றும் சிதைந்துபோன ரணிலின் பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்காக கருத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. சமுதாய பொலிஸ் குழுக்களை அரசியலாக்குகின்ற நோக்கத்துடன் ஒன்றுசேர்த்து வருகிறார்கள். இந்த கூட்டங்களுக்காக  பொலி்ஸ் வெகுமதிகள் நிதியத்தை முறைகேடாக பாவிப்பதோடு  சுற்றறிக்கைகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தை ஈடுபடுத்துவதற்காக வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளின் நிதியங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. 


அதற்கு மேலதிகமாக இளைஞர் அலுவல்களுக்காக பணம் கிடையாதெனக் கூறுகின்ற அதேவேளையில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணத்தை பலவிதங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளக்காக பிரயோகித்து வருகிறார்கள்.


நிதிசார் முறைகேடான பாவனையைத் தடுப்பதற்காக  விரிவான மக்கள் அபிப்பிராயமொன்று அவசியமாகின்றது. ஏறக்குறைய 200 கோடி ரூபா பணத்தை சனாதிபதி செலவுத் தலைப்பிலிருந்து ஒதுக்கி சட்டபூர்வ உத்தரவாதமற்ற உறுதிகளை வழங்குகின்ற வைபவங்களை நடாத்தி வருகிறார்கள். 


வருடத்தின் தொடக்கத்தில் சனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தொகையைவிட பெருமளவிலான பணத்தை குறைநிரப்பு மதிப்பீடுகளிலிருந்து பெற்றுக்கொள்வதோடு வேறு செலவுத் தலைப்புகளைக்கூட பாவிக்கின்ற முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில்  அங்கீகரித்துக் கொள்ளப்பட்டுள்ளன. 


2024 சனாதிபதி செலவுத் தலைப்புக்காக 6607 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கையில் மேலும் 8758 மில்லியன் ரூபாவை ஒதுக்கிக்கொண்டு தேர்தல் செயற்பாங்கிற்காக ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.  இன்னமும் ஒரு வேட்பாளராக உத்தியோகபூர்வமாக பெயர்குறிக்கப்பட்டிராத நிலைமையின்கீழ் பொதுப்பணத்தைப்போன்றே உத்தியோகத்தர்களையும் ஈடுபடுத்தி உள்ளார்கள். தேர்தல் சம்பந்தமாக திகதியொன்று ஆணைக்குழுவினால் பிரகடனஞ் செய்யப்பட்ட பின்னர் அதிகாரத்தை துர்ப்பிரயோகம்செய்து பிரச்சார அலுவல்களுக்காக ஈடுபடுத்த  திட்டமிட்டுள்ளார்கள்.  


அதற்கெதிராக மக்கள் மற்றும்  அரசியல் கட்சி என்றவகையில் நாங்கள் இடையீடு செய்வதோடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பாரிய பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.