Header Ads



JVP யின் முன்மாதிரியான செயற்பாடு


வங்குரோத்து அடைந்த நாட்டில் கரைசேர்த்த கூட்டுறவுச் சங்கத்தினால் 17 கோடி ரூபா செலவில் வைத்தியசாலையொன்று.


அக்குரெஸ்ஸ கூட்டுறவுச் சங்கத்தின் வியத்தகு அரும்பணி!


2005 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் விடுதலை முன்னணியால் அதிகாரம் வகிக்கப்படுகின்ற அக்குரெஸ்ஸ கூட்டுறவுச் சங்கத்தினால்  17 கோடி ரூபா செலவில் 05 மாடிகளைக்கொண்ட வைத்தியசாலையொன்றின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அக்குரெஸ்ஸ நகரின் மத்தியில் நிர்மாணிக்கப்படுகின்ற இந்த கூட்டுறவு வைத்தியசாலைக்காக கடந்த 17 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அடிக்கல் நாட்டினார்.


சரியான தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டுணர்வுடன் எழுச்சிபெற்றால் வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டில் கூட இலாபம் ஈட்டி உயர் மட்டத்திலான சேவையை வழங்க முடியுமென்ற இந்த எடுத்துக்காட்டினை அக்குரெஸ்ஸ கூட்டுறவுச் சங்கம் சமூகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கிறதென்பதையும் இதன்போது கருத்துரைத்த விஜித ஹேரத் தெரிவித்தார். இவ்விதமாக ஆற்றல், திறமை மற்றும் அர்ப்பணிப்புடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கான உண்மையான தேவைகொண்ட பிரஜைகளின் கூட்டமைவான தேசிய மக்கள் சக்தியால் நாட்டை கட்யெழுப்பும் சவாலையும் பொறுப்பேற்க முடியுமென விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.


2005 ஆம் ஆண்டில் "இணக்கப்பாட்டின் எடுத்துக்காட்டு நாளையதினத்தில் நாட்டுக்கு" எனும் தொனிப்பொருளின் எதிர்பார்ப்புடன் கூட்டுறவினை பாதுகாப்பதற்கான அமைப்பு பயணித்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கதெனவும் கூட்டுறவுச்சங்கம் பெற்ற இலாபத்தில் 17 கோடி ரூபாவை செலவழித்து ஐந்து மாடிகளைக் கொண்ட நவீன வசதிகளுடனான முழு நிறைவான வைத்தியசாலையொன்றை நிறுவி மக்களுக்கு சாதகமான சுகாதாரச் சேவையொன்றை வழங்க கூட்டுறவுப் பணிப்பாளர் சபை எடுத்த தீர்மானம் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக உறுப்பினர் தெரிவித்தார். 


அக்குரெஸ்ஸ பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அழைப்பின் பேரில் இத்தருணத்திற்கு தென் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கே.பி.ஜி. சுமித் சாந்தவை முதன்மையாகக் கொண்ட கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல்துறை மருத்துவ நிபுணர் சஞ்ஜீவ குருசிங்க, அக்குரெஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் மானக்க விதான பத்திரணவை உள்ளிட்ட மருத்துவர்கள், அக்குரெஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட பிரதேச செயலாளர்கள், வர்த்தக சமுதாயம், கூட்டுறவு பணியாட்தொகுதி, அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகளை உள்ளிட்ட பெருந்தொகையான பிரதேசவாசிகள் பங்கேற்றனர். 


ஏறக்குறைய 20 வருடங்கள் சங்கத்தின் தவிசாளராக செயலாற்றி வருகின்ற டபிள்யூ.ரி.கே. ராஜபக்ஷ உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் அர்ப்பணிப்பு காரணமாக இன்றவில் தென்மாகாணத்தில் முதன்மைத்தானம் வகிக்கின்ற கூட்டுறவுச் சங்கமாக அக்குரெஸ்ஸ பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மாறியுள்ளது. ஈட்டப்பட்ட 2000 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட சொத்துக்களிலிருந்து பெற்ற இலாபத்தைக் கொண்டு இவ்விதமான நவீன முழு நிறைவான வைத்தியசாலையொன்றை அக்குரெஸ்ஸ கூட்டுறவுச் சங்கத்தினால் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கிறது.

No comments

Powered by Blogger.