Header Ads



உயிர் போகும் நேரம், தாய்க்கு Call எடுத்த ஒரு தளபதியின் இறுதி வார்த்தைகள்


பலஸ்தீன் மேற்குக் கரையில் உள்ள ஜெனினில் இஸ்ரேலியப் ராணுவத்துடன் நடந்த மோதலின் நடுவே அவர் காயமடைந்தார். அவர் தொலைபேசியை எடுத்து தனது தாயை அழைத்தார்:


"நான் உங்களை சொர்க்கத்தில் சந்திப்பேன்.


இறைவனுக்கு நன்றி, நாங்கள் தியாகிகள்.


இறைவன் நாடினால்,  உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன்.


இறைவன் விரும்பினால், என் குடும்பம் மற்றும் என் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும், இறைவன் பதையில் செல்வார்கள்


என் தாய், என் இதயத்தின் உயிர், நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னையும் என் தந்தையையும் நேசிக்கிறேன்.


இம்மையிலும், மறுமையிலும் நான் உங்களைப் பற்றி மகிழ்ச்சியடைவது போல், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள், என்னுடன் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் குறைவைக்கவில்லலை, உங்கள் கடமையை நிறைவேற்றியுள்ளீர்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன்.


நான் காயமடைந்து இப்போது எனது கடைசி தருணத்தில் இருக்கிறேன்.


உலகங்களின் இறைவனாகிய இறைவனுக்கே புகழனைத்தும்.


அவர்களில் சிலரைக் கொல்லும் வரை சாகக்கூடாது என்பதே என் விருப்பம்.


அவர்களில் 30 பேரையாவது கொன்றோம்.


என் தாயே, என்னில் மகிழ்ந்து எனக்காகவும், உங்களுக்காகவும், என் தந்தைக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.


அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று நான் சாட்சியமளிக்கிறேன், மேலும் முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சியமளிக்கிறேன்.


தளபதி ஹமாம் ஹஷாஷ் 


ஜெனினில் உள்ள இஸ்ரேலிய இராணுவ  தளங்கள் மீது மீதான தாக்குதலை நடத்திய செயல்பாட்டாளர்களில் இவரும் ஒருவர், இஸ்ரேலிய இராணுவம் ஒரே ஒரு அதிகாரி அலோன் சாகியுவின் மரணம் மற்றும் 17 பேரின் "காயம்" மட்டுமே ஒப்புக்கொண்டது. அவர்கள் 30 இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றதாக அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.