Header Ads



வான் மறை வசனம் ஒன்று, பின்வருமாறு விவரிக்கிறது...


ஒரு பசுவானது ஒரு நாளைக்கு சுமாராக 100 கிலோகிராம் வரை புல் சாப்பிடுகிறதுஇ ஒரு நாளைக்கு சுமாராக நாற்பதாயிரம் முறைக்கு மேல் அசைபோடுகிறது. 


தினம் தினம் அயராது பால் உற்பத்தி செய்து நமக்கும் பங்கு தரும் பசு மாட்டை சிறிய வடிவில் காட்சி தரும் பிரமாண்டமான ஒரு தொழிற்சாலை என்றுதான் சொல்ல வேண்டும். சுவையும் குணமும் நிறைந்த பாலும் அது உற்பத்தியாகும் விதமும் தெய்வீக அற்புதங்களில் ஒன்றாகும். 


பால் எப்படி உற்பத்தியாகிறது...?


பசு உட்கொள்ளும் புற்கள் மற்றும் இதர தீனிகள் முதலானவை குடலில் தண்ணீருடன் கலந்து ஜீரணித்ததும்இ குடலில் காணப்படும் பக்டீரியாக்களின் மூலமாக மென்மேலும் சக்கையாக்கப்பட்டு மீண்டும் அசை போட வயிற்றின் வழியாக மாட்டின் வாயை வந்தடையும். 


இரண்டாம் கட்டமாக மீண்டும் அதே சக்கைகள் இரண்டாம் குடலுக்கு அனுப்பப்பட்டு மென்மேலும் மென்மையான பதமாக மாற்றப்படும். 


பின்னர் மூன்றாம் கட்டமாக சக்கைகள் மற்றும் அதிலுள்ள தீங்கு விளைவிக்கும் அனைத்துக் கூறுகளும் வேறு சுத்தமான 


சாறுகள் வேறு என சுத்தீகரிக்கப்படும். 


இறுதியாக, நான்காவது குடலின் வழியாக,  மெல்லப்பட்ட சக்கைகள் சிறுகுடலுக்கும்,  எஞ்சிய சத்துக்கள் சாறுகள் பசுவின் பால்மடிக்கும் செல்கிறது.


பொதுவாக கால்நடைகள் அனைத்திலும் காணப்படும் செரிமான செயல்முறை மிக மிக நுட்மானது. பசுவின் உடலினுள் மிக நுணுக்கமான முறையில் இப்படி நான்கு கட்டங்களாக பால் உற்பத்தியாவதால் தான் அதி சுவையான பாலாகவும் மிக குணமான பாணமாகவும் நம்மை வந்தடைகிறது. 


இந்த செரிமான செயல்முறைகளில் ஏதாவது ஒன்று தாறுமாறாக நடந்தால் கூட அல்லது இரத்த ஓட்டம் மற்றும் ஹார்மோன் பங்கீட்டில் சின்ன மாற்றங்கள் நடந்தால் கூட நாம் குடிக்கும் பசும்பால் உகந்ததாகவோ சுவையானதாகவோ இருக்காது.


பொதுவாக பசுக்கள் மற்றுமின்றி இதர கால்நடைகள் யாவற்றினதும் பால்மடிகளில்,  வியக்கத்தக்க முறையில் உருவாகும் பாலானது இரத்தம் மற்றும் செரிமானம் அடைந்த உணவுகளிலுள்ள சத்துக்கள் மூலமாகவுமே உற்பத்தியாகி வருகின்றது என்ற உண்மையை நவீன விஞ்ஞான ஆய்வுகள் நிரூபிக்கின்றன. 


மனிதர்கள் பருகிப் பயன் பெரும் பால் உற்பத்தி பற்றிய துல்லியமான இந்த விளக்கத்தை வான் மறை வசனம் ஒன்று  பின்வருமாறு விவரிக்கிறது. 


(( உண்மையாக உங்களுக்கு கால்நடைகளில் படிப்பினை உள்ளது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும்இ இரத்தத்திற்கும் மத்திலிருந்து தூய்மையான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையாகவும் உள்ளது. ))


📖 அல்குர்ஆன் : 16:66

✍ தமிழாக்கம் imran farook

No comments

Powered by Blogger.