Header Ads



வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு


வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் ஓகஸ்ட் இரண்டாம் வாரத்தில் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். 


இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு கடந்த 4ஆம் திகதி கூடி இறுதி அறிக்கையை ஓகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


நாட்டின் பரிவர்த்தனை நிலை மற்றும் மக்களின் தேவைகளின் முன்னுரிமைக்கு ஏற்ப, வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார். 


பொது போக்குவரத்து வாகனங்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், மாற்று வாகனங்கள், பொது வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஆகிய ஒழுங்குமுறைகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 


இதேவேளை, சுற்றுலாத்துறைக்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அந்த வாகனங்கள் எதுவும் இதுவரை இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 


இதன் கீழ் சுற்றுலா அமைச்சின் அனுமதிக்கு உட்பட்டு 250 பேருந்துகள் மற்றும் 750 வேன்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.