பொலிஸ்மா அதிபராக கடமையாற்ற முடியாது - நீதிமன்றத்தினால் தடை
தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து உயர்நீதிமன்றத்தினால் இன்று -24- இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் உள்ளிட்ட 08 தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவுப்பெற்றதை தொடர்ந்து இன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
யசந்த கோதாகொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணை செய்யப்பட்டன
அரசியலமைப்பு பேரவையின் முறையான அனுமதியின்றி தேஸ்பந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
பொலிஸ் மா அதிபராக நியமனம் செய்வதற்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனம் அரசியலமைப்பு பேரவையினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர்கள் தமது மனுக்களில் கூறியுள்ளனர்.
Post a Comment