Header Ads



ஞானசார தேரர்: விடுதலை அல்ல, பிணையே..!


- எப்.அய்னா -


இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்­வையும் இஸ்­லாத்­தையும் அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டதன் ஊடாக இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக நடந்­து­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு, நான்கு வ­ருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட‌ ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரரை பிணையில் விடு­விக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்ற‌ம் கடந்த 18 ஆம் திகதி உத்­த­ர­விட்­டது.


இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்வை தூற்றும் வித­மாக கருத்து வெளி­யீட்டு, மத உணர்­வு­களை தூண்­டி­ய­தாக கொழும்பு மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்த எச்.சி.1948/20 எனும் வழக்கில் அளிக்­கப்­பட்ட தீர்ப்­புக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்­துள்ள நிலையில், அம்மேன் முறை­யீட்டை விசா­ரித்து தீர்ப்­ப­ளிக்கும் வரையில் தன்னை பிணையில் விடு­விக்­கு­மாறு கோரி ஞான­சார தேரர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் திருத்தல் மனு தாக்கல் செய்தார். அம்­ம­னுவை விசா­ரித்த சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமார் ரத்னம் ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய நீதி­ப­திகள் குழாம் அந்த திருத்தல் மனுவின் தீர்ப்பை அறி­வித்தே, ஞான­சார தேரரை பிணையில் விடு­விக்க உத்­த­ர­விட்­டது.


உண்­மையில், இலங்­கையின் அர­சியல் அமைப்பின் ஊடாக அனைத்து குடி­மக்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டுள்ள உரி­மையின் அடிப்­ப­டை­யி­லேயே ஞான­சார தேர­ருக்கும் அவ­ருக்கு எதி­ரான மேல் நீதி­மன்ற தீர்ப்­புக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்ய சந்­தர்ப்பம் கிடைத்­தது. மேன் முறை­யீடு செய்யும் போது, விசா­ரணை முடியும் வரை பிணையில் இருக்க சந்­தர்ப்பம் கோரு­வ­தற்­கான பூரண உரிமை ஞான­சார தேரர் உள்­ளிட்ட ஒவ்­வொரு குடி­ம­க­னுக்கும் உள்­ளது.

மேல் நீதி­மன்ற வழக்கில் குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­க­பப்டும் வரையில் ஞான­சார தேரர் பிணை­யி­லேயே இருந்த நிலையில், தற்­போது அவ­ரது மேன் முறை­யீட்டு மனு விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்­ப­ளிக்­கப்­ப‌டும் வரை அவ­ருக்கு பிணை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.


அதன்­படி 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­க­ளிலும் ஞான­சார தேரரை விடு­வித்த நீதி­மன்றம், அவ­ரது வெளி­நாட்டு பய­ணங்­களை தடை செய்­த­துடன், கடவுச் சீட்டை நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கவும் கட்­ட­ளை­யிட்­டது.


ஞான­சார தேரரின் திருத்தல் மனு தொடர்பில் அவ­ருக்­காக ஆஜ­ரா­கிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, கொழும்பு மேல் நீதி­மன்றம் தனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக வழங்­கிய தீர்ப்­பினை ஆட்­சே­பித்து தனது சேவை பெறுநர் மேன் முறை­யீடு செய்­துள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அ­தன்­படி முதல் படி முறை­யாக பிணை பெற தண்­டனை அளித்த மேல் நீதி­மன்­றி­லேயே பிணை விண்­ணப்பம் செய்­த­தா­கவும், விஷேட கார­ணிகள் எதுவும் இல்லை எனக் கூறி அந்த பிணை விண்­ணப்­பத்தை மேல் நீதி­மன்றம் நிரா­க­ரித்­த­தா­கவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா சுட்­டிக்­காட்­டினார்.


இதன்­போது மன்றில் மருத்­துவ அறிக்கை ஒன்­றினை சமர்ப்­பித்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, ஞான­சார தேரர் இரு­தய நோய் உள்­ளிட்ட பல நோய் நிலை­மை­களால் அவஸ்தைப்படு­வ­தாக கூறினார். அத்­துடன் அவாது மேன் முறை­யீட்டு மனுவை விசா­ரித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட சுமார் 3 வரு­டங்கள் ஆகலாம் என குறிப்­பிட்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனில் சில்வா, அதனால் மேன் முறை­யீட்டு மனுவை விசா­ரித்து தீர்ப்­ப­ளிக்கும் வரை அவரை பிணையில் விடு­விக்க வேண்டும் என கோரினார்.


இந்த கோரிக்­கைக்கு திருத்தல் மனுவின் பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ள சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் ஜனக பண்­டார கடும் எதிர்ப்பு வெளி­யிட்டார். ஒரு பிர­தி­வாதி குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட பின்னர் 3 மாதங்­க­ளுக்குள் அவ­ரது வழக்குக் கோவை மேல் நீதி­மன்றில் இருந்து மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு மாற்­றப்­ப­டு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார். அவ்­வாறு அனுப்­பப்­படும் வழக்குக் கோவையை மைய­ப்ப­டுத்­திய மேன் முறை­யீட்டு விசா­ர­ணையை மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் ஒரு வரு­டத்­துக்குள் ஆரம்­பித்து, அவ­ச­ர­மாக முடிக்கும் முறைமை ஒன்று அமுல் செய்­யப்பட்­டு­வரும் நிலையில், ஞான­சா­ரரின் பிணை விண்­ணப்பம் தொடர்பில் ஆராய்­வது அநா­வ­சி­ய­மா­னது என அவர் வாதிட்டார்.


இந்த நிலையில், முன் வைக்­கப்­பட்ட அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்த நீதி­ப­திகள், ஞான­சார தேரரை பிணையில் விடு­விக்க உத்­த­ர­விட்­டனர்.

உண்­மையில் ஞான­சார தேரரின் மேன் முறை­யீட்டு மனுவில், அவர் குற்­ற­வா­ளி­யாக காண­ப்படும் இடத்து, அல்­லது தண்­டனை காலம் திருத்­த­ப்படும் இடத்து அவர் அவ்­வ­ழக்கின் தீர்ப்பை தொடர்ந்து அதனை அனு­ப­விக்க வேண்டி வரும். மாற்­ற­மாக மேன் முறை­யீட்டில் அவர் நிர­ப­ரா­தி­யாக காணப்­பட்டால் மட்­டுமே அவ­ருக்கு விடு­தலை கிடைக்கும்.


மேன் முறை­யீட்டு நீதி­மன்­ற­மா­னது மேன் முறை­யீட்டை விசா­ரிக்கும் போது, மேல் நீதி­மன்றில் முன் வைக்­கப்பட்ட சாட்­சி­யங்கள், தீர்ப்­புக்கு ஏது­வான கார­ணிகள், தண்­டனை காலம் நியா­ய­மா­னதா போன்ற விட­யங்­க­ளையே ஆராயும். மாற்­ற­மாக ஒரு மேல் நீதி­மன்றம் செய்யும் சாட்சி விசா­ர­ணை­களை மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் செய்யப் போவ­தில்லை. மேல் நீதி­மன்றம் முன்­னெ­டுத்த விசா­ரணை, அதன் தீர்ப்­பினை ஆராயும் வேலை­யையே மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் செய்து, ஞான­சார தேரர் குற்­ற­வா­ளியா நிர­ப­ரா­தியா என்­ப­தையும், அவ­ருக்கு வழங்­கப்பட்ட தண்­டனைக் காலம் தொடர்­பிலும் தீர்­மா­னிக்கப் போகி­றது.


முன்­ன­தாக கருத்து வெளி­யிட்டு, மத உணர்­வு­களை தூண்­டி­ய­தாக கொழும்பு மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்த எச்.சி.1948/20 எனும் வழக்கின் விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்த நிலையில், 4 வருட சிறைத் தண்­டனை ஞான­சார தேர­ருக்கு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.- Vidivelli

No comments

Powered by Blogger.