நீங்கள் கட்டாரில் இருப்பவராயின்...!
கொஞ்சம் போய்த்தான் பாருங்களன் அதன் அழகை ரசித்துவிட்டு ஒரு வக்துத் தொழுகையும் தொழுதுவிட்டு வரலாம்.
1. இமாம் அப்துல் வஹாப் மஸ்ஜித் -
கட்டாரின் மிகப் பெரிய பள்ளிவாசல் இதுதான். பொதுவாக கட்டாரிலுள்ள அனைவருக்கும் இது அறிமுகமாக இருக்கும்.
2. கோல்டன் மஸ்ஜித் -
இது கதாராவில் உள்ள ஒரு மஸ்ஜித். தங்க முலாம் பூசியது போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளதால் இதனை கோல்டன் மஸ்ஜித் எண்டு சொல்லுறாங்க. இது கதாரா மியூசியம் கலரிக்கி அருகாமையில் இருக்கின்றது.
3. கதாரா மஸ்ஜித் -
இதனை கதாரா ப்ளூ மஸ்ஜித் என்றும் சொல்லுவார்கள். அரேபிய பாரம்பரிய கலாச்சார அலங்காரங்களால் மெருகூட்டப்பட்டுள்ளது. இதுவும் கதாராவில்தான் அமைந்துள்ளது. கதாராவில் உள்ள கட்டார் போட்டோகிராபி சென்டர்க்கு அருகாமையில் இது உள்ளது
4. லீனிங்க் மஸ்ஜித் -
இது ஸஹானிய்யா சிட்டியிலுள்ள ஷெய்க் பைசல் பின் காசிம் அல்தானி மியூசியத்தோடு அமைந்துள்ளது. இத்தாலியிலுள்ள லீனிங்க் டவரை போன்று இது அமைக்கப்பட்டுள்ளது.
5. எடியூகேஷன் சிட்டி மஸ்ஜித் -
இது எடியூகஷன் சிட்டி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசல். இதனை ஒட்டியதாகவே ஒக்சிஜன் பார்க்கும் அமைந்துள்ளது. பயணிப்பதற்கு வசதியாக அருகாமையில் மெட்ரோ ஸ்டேசனும் உண்டு.
6. லுசைல் மஸ்ஜித் -
இதனை ஷுபி மஸ்ஜித் எண்டும் சொல்வார்கள். லுசைல் மரீனா Bபீச்சிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. நான் அறிந்த வகையில் கட்டாரில் ரமழான் காலத்தில் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு அதிகமாக மிக நீண்ட நேரம் கியாமுல் லைல் தொழுவிக்கின்ற பள்ளிவால் இதுதான்.
7. வக்ரா மஸ்ஜித் -
வக்ரா மெட்ரோ ஸ்டேசனில் இருந்து வுகைர் நோக்கிச் செல்கின்ற பாதையில் அமைந்திருக்கின்றது.
8. கட்டார் விமான நிலைய பள்ளிவாசல் -
கட்டார் விமான நிலையத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் இது. வெளித் தோற்றம் முழுக்க கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இவை அல்லாது ப்ரூசியா பள்ளிவாசல், பனார் பள்ளிவாசல் என்று இன்னும் சில இருக்கின்ற. அப்புடி ஏதும் இருந்தால் அவற்றை கொமெண்டில் பதிவிடுங்கள் தேவையானவர்கள் பயனடைந்துகொள்ளட்டும்
குறிப்பு : அல்லாஹுத் தஆலா மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா (பலஸ்தீன்) ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டும் விஷேட அந்தஸ்து வழங்கியுள்ளான். அதனை நோக்கி பயணிப்பதனை இபாதத் ஆக்கியுமுள்ளான். அது புனிதமானது நன்மை தரக்கூடியது. அங்கு செய்யப்படுகின்ற அமல்களுக்கும் விஷேட தரஜா உண்டு.
இது தவிர உலகத்திலுள்ள எந்தப் பள்ளிவாசல்களுக்கும் அல்லாஹ்விடத்தில் விஷேட அந்தஸ்து கிடையாது. புனிதம் கருதியோ நன்மை கருதியோ எந்தப் பள்ளியை நோக்கியும் பயணங்கள் மேற்கொள்வது ஆகாது. அது கட்டார் பள்ளியாக இருந்தாலும் சரி அல்லது காத்தான்குடி அக்சா பள்ளியாக இருந்தாலும் சரி. வேண்டுமென்றால் பள்ளியின் கட்டிடக் கலையை அதன் அழகை பார்வையிட போகலாம். வழமையான அமல் இபாதத்களில் ஈடுபடலாம். எனவே இதனைக் கருத்தில் கொண்டு உங்கள் பயணங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.
- Sajeer Muhaideen -
Post a Comment