குறி வைக்கப்பட்டது எப்படி..? ஈரான் இராணுவ இல்லத்திலேயே தாக்குதல்
ஹமாஸ் தலைவர் தலைநகர் தெஹ்ரானின் வடக்கில் அவர் தங்கியிருந்த இல்லத்தை தாக்கிய “airborne guided projectile” "வான்வழி வழிகாட்டப்பட்ட எறிகணையால்" கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் (செவ்வாய்கிழமை 22:30 GMT) நகரின் வடக்கில் இராணுவ வீரர்களுக்கான சிறப்பு இல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அவரது பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர்.
ஹமாஸ் அமைப்பில் 1987 இணைந்த ஹனியே இதற்கு முன்னதாகவும் 4 சந்தர்ப்கங்களில் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியதாக சர்வதேச. ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment