தயாசிறியின் அதிரடி - அப்படியே பல்டியடித்த மைத்திரிபால
அவரை கட்சித் தலைமையகத்திற்குள் பிரவேசிக்க பொலிஸார் அனுமதிக்காத நிலையில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கட்சித் தலைமையகத்திற்கு முன்பாக கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகரவின் கடமைகளை பொறுப்பேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென்றாலும், அதில் பங்கேற்கும் தகுதி தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் எனவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மைத்திரிபால தயாசிறியை சுதந்திரக் கட்சியின் செயாளர் பதவியில் இருந்து நீக்கியமை குறிப்பிடத்தக்கது.
பதவிப் பித்து தலைக்கடித்த வெட்கம் ரோசமில்லாத இந்த நபர்களுக்கு பிரித்தானிய தேர்தல் முடிவுகள் நல்ல உதாரணம். இந்த பதவிப்பித்தன்களுக்கு சுனக்குக்கு எற்பட்டதை விட மோசமான தோல்வியும் அவமானமும் விரைவில் காத்திருக்கின்றது. அந்த ஆரோக்கியமான பதிலை மிகவும் சாணக்கியமாக கொடுப்பதற்கு இந்த நாட்டு மக்கள் அடுத்த என்ன தேர்தல் வந்தாலும் அதில் அவர்கள் கண்டு கொள்வார்கள்.
ReplyDelete