Header Ads



கம்மல்துறை கவிஞர்களின் 'தூண்டில்கள் துடிக்கினறன’


- இஸ்மதுல் றஹுமான் -


 கம்மல்துறை கவிஞர்களின் 100 கவிதைகள் தொகுக்கப்பட்ட “தூண்டில்கள் துடிக்கின்றன” கவிதை நூல் வெளியீட்டு விழாவும் கவியரங்கும் எதிர்வரும் 14 ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு நீர்கொழும்பு, கம்மல்துறை அல்-பலாஹ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.


  இந்த நிகழ்வு பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலா பூஷணம் எம். ஜே. எம். தாஜுதீன் தலைமை கவிஞர் போருத்தொட்ட ரிஸ்மி அரங்கத்தில் நடைபெறும்.


  பிரதம அதிதியாக ஓய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகமும், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் உறுப்பினருமான  எம். எம். மொஹமட் (நளீமி) கலந்து சிறப்பிப்பதுடன் விசேட அதிதியாக தினகரன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர். தே. செந்தில் வேலவர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கவிஞரும் ஒலிபரப்பாளருமான அஷ்ரப்  சிஹாப்தீன், வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கலா பூஷணம், கவிமணி என். நஜ்முல் ஹுசைன், சிரேஷ்ட ஊடகவியலாளர்  ‘ஈழத்து நூன்’ கலா பூஷணம் எம். ஏ. எம். நிலாம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.


   கம்மல்துறை அல்-பலாஹ் கல்லூரியின் அதிபர் எம். யு. பாயிஸ் (நளீமி),  பலகத்துறை பெரிய பள்ளிவாசல் தலைவர் எம் முஹம்மத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் பங்குபற்றுகின்றனர்.


    நூலின் முதற் பிரதியை ஓய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகம் எம். எம். மெஹமட்  அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.


    கம்மல்துறை இக்பால் தலைமையில் நடைபெறும் கவியரங்கில் பலகத்துறை இளம் கவிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.


    கவிஞர்களுக்கு  ‘தமிழ் ஆசான் ஜெலீல் அதிபர் விருது’ வழங்கும் நிகழ்வு கலைஞர் எம்.ஜே.எம். சாதிக் தலைமையில் நடைபெறும்.


   அபூசஊத் சைலாஸ்  நிகழ்வுகளை ஒருங்கிணைக்க  ஏ. எல். எம். சல்மான் மற்றும் சப்ரான் சலாவுதீன் ஆகியோர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்கள்.

No comments

Powered by Blogger.