Header Ads



விஜயதாசவுக்கு ஏமாற்றம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால்  ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தேர்தல் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவரும், பதில் பொதுச் செயலாளருமான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோர், அந்தப் பதவிகளில் பணியாற்றவும் தேர்தல் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சந்திம எதிரிமன்ன இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.


தற்காலிக தலைமைச் செயலாளர் மற்றும் செயல் தலைவரின் முடிவுகளை நடைமுறைபடுத்துவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு மீண்டும் இன்று நீட்டிக்கப்பட்டது.


அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று பாதுகாப்பு தரப்பு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் விவசாய அமைச்சருமான மகிந்த அமரவீர ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு இன்று பரிசீலிக்கப்பட்டபோது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.