இரவு நேர கொள்ளையர்களின் அட்டகாசம், பிடித்துக் கொடுத்தால் சன்மானம்
யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக, யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் இரவு வேளைகளில் முகங்களை மறைத்து கறுப்பு துணிகளால் கட்டியவாறு மோட்டர் சைக்கிள் மற்றும் சைக்கிளில் வந்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அவ்வாறானவர்கள் தொடர்பான தகவல்களை தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், கொக்குவில், மானிப்பாய் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் வீதிகளில் முகங்களை மறைத்தவாறு கொள்ளையர்கள் திரியும், சிசிரிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதில் உள்ள நபர்கள் பற்றிய தகவல்களை அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
தகவல்கள் வழங்குவோரின் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் , அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Post a Comment