காசா யுத்தம் பற்றிய எதிர்ப்பு தாக்குதலே, டிரம்ப மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது - அவுஸ் பிரதமர்
காசா யுத்தம் தொடர்பிலான எதிர்ப்பு தாக்குதலே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி துப்பாக்கி பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியமை நிம்மதியளிப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இது மன்னிக்க முடியாத தாக்குதல். ஜனநாயக செயற்பாடுகளில் வன்முறைக்கு இடமில்லை.
காசா யுத்தம் தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களிற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் அதிகரிப்பதையும் டிரம்ப்மீதான தாக்குதலையும் அமெரிக்கா மிக அவதானத்துடன் கையாள வேண்டும்.
இவ்வாறான சம்பவங்களை எந்த தயக்கமும் இன்றி எதிர்க்க வேண்டும்.
மேலும், நாங்கள் காராசாரமான விவாதத்தின் அளவை குறைக்கவேண்டும். சொல்லாட்சியை அதிகரிப்பதன் மூலம் எந்த பயனும்கிட்டப்போவதில்லை.” என அன்டனி அல்பெனிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment