யானை - மொட்டு உடைவு, வலுக்கும் சந்தேகங்கள்
- Siva Ramasamy -
ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக்கட்சி ரணிலை ஆதரிக்கவில்லை... தம்மிக்க பெரேராவை இறக்கி கோடிக்கணக்கில் செலவழித்தாலும் இனி இறங்குமுகம் தான்.
மொட்டுக்கட்சியின் ஆதரவு, எப்படியென்றாலும் தேவை என்று கருதி ரணில் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தினார். கடிதம் ஒன்றைக்கூட இறுதியாக அனுப்பினார்..
மேடையில் ஏறி ‘அப்பே ஹாமுதுருவனே’ என்று மஹிந்த இரண்டு வார்த்தைகள் பேசினால் வாக்குகளை கவரலாம் என்று நினைத்திருப்பார் ரணில்..ஆனால் பலன் இல்லை.. கடிதத்திற்கு பதிலும் இல்லை.. மொட்டுக்கட்சி இன்றுடன் இரண்டாகப் போய்விட்டது என்பதுதான் பலரின் கணிப்பு..
ஆனால் எனக்கென்னவோ இவையெல்லாம் நெட்ப்ளிக்ஸில் ஆங்கில படம் பார்க்கும் ரணிலின் மயிர்கூச்செரியச் செய்யும் கேம்கள் போலவே தெரிகின்றன.
சரத் பொன்சேகா , விஜேதாச பின்னாலும் ரணில் தான் இருக்கிறாரோ என்ற சந்தேகமெல்லாம் தேவையில்லை. ராஜபக்சக்கள் விலகி இருந்தால் தான் ராஜபக்சக்கள் தன்னுடன் இல்லை என்று வெளியில் காட்டி அரசியல் கூட்டணிக்கு ஆள்சேர்க்கலாம் என்று ரணிலுக்கு எக்கச்சக்க நன்மை இருக்கிறது..
மறுபுறம் ரணில் தனியார்மயமாக்கல் என்ற பெயரில் நாட்டை விற்கமுயன்றார் என்று கூறி சிங்கள மக்களின் வாக்குகளை பெற முயலும் மொட்டுக்கட்சி.. சிங்கள வாக்குகளை சிதறடித்தால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் ரணிலை வெல்லவைக்கலாம் என்பதும் ஒரு கணிப்பு..
ரணிலும் ராஜபக்சக்களும் ஒரே தட்டில் சாப்பிட்டு திடீரென சண்டையிடுவது தான் உதைக்கிறது.. ரணிலுக்கு ஆதரவளித்து அவர் தோல்வியடைந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் மொட்டுக்கட்சியில் நொமினேஷன் கிடைக்காது என்பதும் அந்த நேரம் வேறு கட்சியில் நின்று வெல்ல முடியாதென்பதும் இப்போது ரணிலுடன் நிற்கும் மலைவிழுங்கி மகாதேவன்களுக்கு தெரியாதா என்ன?
தெரியும்.. அதெல்லாம் தெரிந்துதான் ரணிலும் ராஜபக்ச தரப்பும் கேம் பண்ணுவதாக சந்தேகம் வருகிறது..
பிரியும்போது ஆயிரம் காரணங்களை சொல்லும் மொட்டுக்கட்சி, சிலவேளை எலெக்சன் நடந்து , ரணில் சிலசமயம் வென்றால் அவருடன் சேர்வதற்கும் 1500 காரணங்களை கைவசம் வைத்திருக்கும்..
ரணிலுக்கும் அவரை ஜனாதிபதியாக்கிய மொட்டுக்கட்சிக்கும் இப்போதுள்ள சவால் தேசிய மக்கள் சக்தி.. அதன் வாக்குப்பலத்தை , மக்கள் ஆதரவை உடைக்க வேண்டும்.. அதற்கு ஆடும் நாடகமே இதுவாக இருக்கக் கூடும் என் கணிப்பு சரியாக இருந்தால்..
வேண்டுமாயின் இருந்துபாருங்கள் ரணில் தரப்பும் மொட்டுக்கட்சியும் முட்டி மோதிக்கொள்ளும்.. வாதங்கள் அனல் பறக்கும்..
Post a Comment