Header Ads



சீர்திருத்த கைதி மீது, அதிகாரி பலத்த தாக்குதல்


- இஸ்மதுல் றஹுமான் -


நீர்கொழும்பு வாலிப குற்றவியல் சீர்திருத்த சிறைச்சாலை சிறைக்கைதி ஒருவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


    தாக்குதல் நடாத்திய அதிகாரியிடம் வாய்மொழியை பெற்று நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


      ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச் சாட்டில் நீர்கொழும்பு, பல்லன்சேனை வாலிபர் குற்றவியல் சீர்திருத்த திறந்தவெளி சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தெமட்டகொட, பேஸ்லைன் வீதியைச் சேர்ந்த ரசிக்க சந்தன ரத்நாயக்க என்பவரே தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.


     இவர் அங்கு சிறைக் கைதியாக இருக்கும் போது அவருக்கு பனித்த  விறகு கொத்தும் வேலையை செய்யும் போது அதிகாரியுடன் ஏற்பட்ட வாய் தகராறு உச்சமடையவே அந்த அதிகாரி விறகு கட்டையால் இந்த சிறைக்கைதியை தாக்கியதனால் பலத்த காயத்துக்கு உள்ளானதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


      காயமடைந்த கைதியை முதலில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனமதித்து பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.


        நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன் சுஜித் ரன்துன் (35402) சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி ரகித்த அபேசிங்க முன் அறிக்கை சமர்பித்தார்.


 அந்த அறிக்கைக்கு இனங்க குறித்த அதிகாரியிடம் வாய்மொழியை பெற்று நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.