இலங்கையின் முதலாவது பணக்காரராக பசில் ராஜபக்ச இருக்கலாம்
இலங்கையின் முதலாவது பணக்காரராக பசில் ராஜபக்ச இருக்கலாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் பசில் ராஜபக்சவிற்கு உள்ள சொத்தை சரியாக மதிப்பீடு செய்து கணக்கீடு செய்தால், அதை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்காக பசில் ராஜபக்ச பணம் பெற்றுக்கொண்டாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், யாரிடமும் பணம் கேட்கும் நிலை பசில் ராஜபக்சவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏழு தலைமுறைக்கு தேவையான சொத்தை பசில் ராஜபக்ச அமெரிக்காவில் குவித்துள்ளார் என்றும், மகிந்த ராஜபக்ச அப்படியல்ல என்றும், நாமல் ராஜபக்ச பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment