Header Ads



சீனரிடமிருந்து பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு


சீன நாட்டு பெண் ஒருவரிடமிருந்து ரூ. 43 இலட்சம் பெறுமதியான, 146 வெளிநாட்டு சிகரெட் கார்டன்கள் மீட்கப்பட்டுள்ளதாக, சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகமும், சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.


நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வந்த MH0179 எனும் விமானத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான சீன நாட்டவரிடம் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் சுமார் 29,200 சிகரெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.


இந்த சிகரெட் தொகையின் மொத்த பெறுமதி ரூ. 4,339,071 என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சிகரெட்டுகளை சுங்கத்துறையினர் கைப்பற்றாமல் சந்தைக்கு வெளியிடப்பட்டிருந்தால், அரசுக்கு ரூ. 3,343,800 வருமான இழப்பு ஏற்பட்டிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


1999 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க புகையிலை வரிச் சட்டம் மற்றும் 2004 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட புகையிலை வரிச் சட்டம் 9 இன் படி முறையான அனுமதிப்பத்திரம் இன்றி புகையிலை அல்லது அது அடங்கிய சிகரெட்டுகளை அல்லது உட்பத்திகளை இலங்கைக்குள் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. 


அதற்கமைய குறித்த சட்டவிரோத சிகரெட்டுகள் சுங்க கட்டளைச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


சந்தேகநபருக்கு விதிக்கப்பட்ட ரூ. 100,000 அபராதம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.