டிரம்பின் கொலை முயற்சியில் தொடர்பா..? ஈரான் வெளியிட்டுள்ள பதில்
'இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை என வர்ணித்துள்ளது.
ஈரான் குடியரசின் கண்ணோட்டத்தில்இ டிரம்ப் ஒரு குற்றவாளி, அவர் ஜெனரல் சுலைமானியை படுகொலை செய்ய உத்தரவிட்டதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அவரை நீதியின் முன் நிறுத்துவதற்கான சட்டப் பாதையை ஈரான் தேர்ந்தெடுத்துள்ளது ஈரான் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பை கொல்ல, ஈரானிய சதித்திட்டம் பற்றிய உளவுத்துறையை அமெரிக்கா பெற்றது என, அமெரிக்க சார்பு சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய, ஈரான் மேற்கொண்ட சதித்திட்டம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் மனித மூலத்திலிருந்து சமீபத்திய வாரங்களில் உளவுத்துறை பெற்றது எனவும், இது சமீபத்திய வாரங்களில் முன்னாள் ஜனாதிபதியைச் சுற்றியுள்ள ரகசிய சேவையின் பாதுகாப்பை அதிகரிக்க வழிவகுத்தது எனவும், இது குறித்து பலர் சிஎன்என் இடம் குறிப்பிட்டனர் எனவும் அந்த ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Post a Comment