Header Ads



அல்லாஹ் நமக்கு அளித்த, கொடைகளில் சிறந்தது எது..?


அல்லாஹ் நமக்கு அளித்துக் கொண்டிருக்கும் கொடைகளில்,  சிறந்தது எது தெரியுமா?


நம்மிடம்  இருக்கும் குறைகளையும் நாம் செய்யும் தவறுகளையும் பகிரங்கப்படுத்தாமல் அல்லாஹ்  மறைப்பதுதான்.


நம்மிடம்  எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும்,   நம்முடைய பலவீனங்கள் வெளிபடுத்தப்பட்டு நாம் இழிவுக்குள்ளாக்கப்படும் போது,   அவை ஒரு பலனையும் தராது.


 நபி பெருமானார்ﷺ  அவர்கள்

 

என் பலவீனங்களை மறைப்பாயாக " என அல்லாஹ்விடம் இறைஞ்சியிருக்கிறார்கள் 


எனவே தான் இந்த துஆவை திக்ராக சில பெரியார்கள் தங்கள் திக்ரு மஜ்லிஸில் ஓதுவார்கள் 


يا عالم السر منّا لا تهتك الستر عنا.. وعافنا واعفُ عنا و كن لنا حيثُ كنا


எங்களின் இரகசியங்களை அறிந்தவனே,  எங்கள் திறையைக் கிழித்து விடாதே,  எங்களைப் பாதுகாப்பாயாக,  எங்களை மன்னிப்பாயாக,  நாங்கள் எவ்வாறு இருப்பினும் எங்களுடனேயே இருப்பாயாக


இஸ்மாயில் நாஜி பாஜில் மன்பயி காசிமி

No comments

Powered by Blogger.