Header Ads



டிலானின் கார் விபத்து


பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் கார் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாராளுமன்ற உறுப்பினர் இன்று (13) மத்துகமவில் கூட்டம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது தெற்கு அதிவேக வீதியின் 82/1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.  


இந்த விபத்தில் டிலான் பெரேராவுடன் பயணித்த நபரொருவர் காயமடைந்துள்ளார்.


கனமழை காரணமாக கார் சறுக்கி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.