இறைவனைக் காணச் சென்றவளுக்காக இந்தக் கவிதை...
அவள் இழப்பின் துயர்
எம்மை வேதனையில்
ஆழ்த்திவிட்டது.
அல்லாஹ் மேலான ஜென்னத்துல்
பிர்தவ்ஸை அருள் பாலிப்பானாக!
ஆமீன்.
இந்தக் கவிதை அவளுக்காக..
மரணம் யாரையும் விடாது..
எனதருமை தோழியே!
நிரந்தரமாய் எம்மை
விட்டுச் சென்றாயே..
கூட்டை விட்டு கிளி
பறந்தது போல
உன் உடலை விட்டு
உயிர் பறந்ததடி..
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்
நட்புப் போல
எதுவும் இல்லையடி..
பள்ளியென்னும் நந்தவனத்தில் கண்ட
பூ நீயடி..
அந்த துளிர்
விருட்சமாகி பல கிளையோடு பரந்து
வாழ்வதற்குள்
மரணம் வந்துன்னை
அணைத்தது ஏனடி..
குஜானாஸ்..
பெயரில் மட்டும்
நீ வித்தியாசமானவள் அல்ல.. குணத்திலும்
நீ வைரமடி..
விருந்தோம்பலில் மட்டுமல்ல பண்பிலும்
நீ கோடீஸ்வரியடி..
நீ முன்னே சென்றாயடி
நாமும் இறைவன் விதித்த தினத்தில்
மண்ணறை பயணமாவோமடி..
எத்தனை சோகம்
எத்தனை கவலை
எத்தனை ஏமாற்றம்
நம்மை நோக்கி அம்பாய்
வந்தாலும்..
நட்புக்களைக் கண்டதுமே
மனதில் மகிழ்ச்சி ரேகை
மட்டுமே நம்மைச் சூழும்..
எல்லாவற்றையும் துறந்து..
புள்ளி மான் கூட்டம் போல மனம் குதுகளிக்கும்.
வெளிநாட்டில் நீ இருந்த
போதும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருந்தாய்..
என்றும் எமக்குள் வாழ்வாய்..
துன்பத்திலும், இன்பத்திலும் எம்மோடு
வாழ்ந்தவள் நீ..
என்றும் வாழ்வாய்..
பிரிவுத்துயரில் வாழ்கின்றோம்
இன்சா அல்லாஹ்
சுவனத்தில் சந்திப்போம்..
சிரித்துப் பேசும்
உன் குரல் எம் காதில்
ரீங்காரம் செய்கிறது..
மறக்குமா உன் நினைவு..
மறக்குமா உன் செயல்கள்..
மறக்குமா உன் விருந்தோம்பல்..
உன் மரணம்
எம்மை ஆழ்ந்த துயரில்
வீழ்த்தியதடி உயிர் தோழியே..!
- யாழ் றமீஸா யாசீன் -
Post a Comment