Header Ads



பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு ஏற்படுத்திய விபரீதம்


ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், மாத்தறை நாவிமன பிரதேசத்தில் மாணவர் ஒருவர் பொலிஸாரின் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், தலையில் பலத்த காயம் அடைந்து முற்றாக ஊனமுற்றுள்ளார்.


இதனால் குறித்த மாணவனின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை மீட்க உதவி கேட்கின்றனர்.


பிறவியிலேயே ஊனம் இல்லாத ஹரிஷ் ஹன்சகவுக்கு நேர்ந்த விபத்தால், இன்று பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு பொலிஸ் அதிகாரியின் தவறு காரணமாக ஹன்சகவின் தலையில் சுடப்பட்டு, அவர் ஊனமுற்றார்.


இவர் தனது நண்பர்களுடன் கிராம விகாரை ஊர்வலத்தில் காவடி ஆடுவதற்காக மயில் தோகை தேட சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் கடின பிரயத்தனத்தால் ஹன்சக இன்று இவ்வாறு வாழ்ந்து வருகின்றார்.


5 பேர் கொண்ட குடும்பத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தையை குணப்படுத்துவது பெற்றோருக்கு மிகவும் சவாலாக உள்ளது.


அதற்குக் பிரதான காரணம் தந்தையின் கூலி வேலையில் இருந்து வரும் வருமானமே.


இதுவரை செய்த சிகிச்சையால், படுக்கையில் தலைகீழாக இருந்த ஹன்சக, தற்போது எழுந்து உட்காரும் நிலைக்கு வந்துள்ளார்.


உள்ளூர் வைத்தியர் ஒருவர் அவருக்கு மேலும் சிகிச்சை அளிக்க விருப்பம் தெரிவித்தாலும், அதற்கு ஹன்சகவை அழைத்துச் செல்ல பெற்றோரால் முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது.

No comments

Powered by Blogger.