அரசாங்கத்தை கடுமையாக கண்டிக்கிறது சட்டத்தரணிகள் சங்கம்
அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி மேற்கொண்ட நியமனங்களை உயர்நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்ற அரசாங்கத்தின் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை தொடர்பில், உயர் நீதிமன்றத்தினால் அண்மையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை வழங்கிய அனுமதியை நீதிமன்றத்தால் மாற்ற முடியாது என குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது எனவும், பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டிப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment